நதிகளே சாட்சி
எவ்வளவு தூரம் பாதையை விட்டு விலகிச் சென்றாலும் தாய்மடி சேரலாம்.. நதிகளே சாட்சி!

எவ்வளவு தூரம் பாதையை விட்டு விலகிச் சென்றாலும் தாய்மடி சேரலாம்.. நதிகளே சாட்சி!
பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்!
மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது.
அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது; நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது. ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி , மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதனால் நம் மதத்திற்க்கு எந்தவித தீங்கும் இல்லை. அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும். ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல. உலகிலுள்ள அனைவரையும்…
நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது. நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?
நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உருவாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும் ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ;…
விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை…
நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாக தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயை தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். தன் உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும். இப்படி நம் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தமாக்குவது மூலமாக அனைத்து நோய்களையும் எந்தவொரு மருந்து, மாத்திரை, மருத்துவர், இல்லாமலும் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே உணவு குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று உழைப்பு, தூக்கம் இந்த ஐந்தையும் சரி…
இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருளும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாக புதிதாக மாற்றி விடும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.