காத்திருக்கப் பழகு 3
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு
எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.
பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.
ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை.
மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.
மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும். மனசு வீரியம் கொள்ளும். உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!
சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.
சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.