வியாழன் 1
கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு. சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.