செயலின் நோக்கம்
ஒரு வீட்டுக்குப் பிச்சைக்காரன் ஒருவன் வந்தான். அந்த வீட்டுக்காரி உள்ளேயிருந்து அவனுக்கு அரிசியைக் கொண்டு வந்தாள். அதைத் தன் குழந்தையிடம் கொடுத்து பிச்சை இடச் செய்தாள். அடுத்த வீட்டுக்காரியும் அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிச்சைக்காரன் தன் வீட்டு வாயிலுக்கு வந்ததும் அவளும் பக்கத்து வீட்டுக்காரி செய்ததுபோல் தன் குழந்தையின் கைகளில் அரிசியைக் கொடுத்துப் பிச்சையிட்டாள். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இறந்தனர். மேல் உலகத்தில் தீர்ப்பு, முந்தைய வீட்டுக்காரி சொர்க்கத்துக்கும், அவளைப் பார்த்துப் பிச்சையிட்ட…