சொத்தைக்களா (Falcourtia indica)
சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
கரிசாலை (வெள்ளை கரிசலாங்கண்ணி) வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். இதனால் கண் பார்வை அதிகரிப்பதுடன் உடல் பலமும் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகையை உண்டு வர நரை,திரை முதுமை மாறும் என்பதாக நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர் அதோடு,கல்லீரல் பலப்படும். இராமலிங்க வள்ளலார் கரிசாலையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தினமும் காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட மலச்சிக்கல் தீரும். கரிசாலைச் சாற்றல் வாய் கொப்பளித்தால் பற்களும், ஈறுகளும்,…
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.
கருங்காலி கருங்காலி பழங்கள் உண்ணத் தகுந்தவை பலவிதமான நுண் சத்துக்கள் பொருந்தியவை
நறுவிலி பலவிதமான நுண்சத்துக்கள் நிறைந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும். கொழகொழப்புச் சுவை மிகுந்த இந்த பழம் வாய்,பல் மற்றும் ஈறு நோய்களுக்கும். மார்பு மற்றும் சிறுநீர்த்தாரை நோய்களுக்கும் சிறந்த துணை மருந்தாகும்.
எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…
நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.
கோவைப் பழங்கள் உண்ணுவதற்கு மிகவும் விருப்பமானவை. கோவைக்காய் கூட்டு மற்றும் பொறியல் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது மேலும் வற்றல் செய்வதற்கும் உகந்தது. இந்த வற்றலை நெய்யில் வறுத்துச் சாப்பிட இளைத்த உடலைத் தேற்றும், வயிற்று புழுக்களை வெளியேற்றும். சில நாட்டுப் பழங்குடி மக்களால் இதன் இளம் தளிர் இலைகளை உண்ணப்படுகின்றன கோவைக்காயை சாம்பார், கூட்டு போன்றவை செய்து சாப்பிடலாம்.
பால்பெருக்கி: இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம். இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு இந்தக் கீரைக்கு உள்ளதால் தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட சிறந்த பலன் ஏற்படும். இறுகிப் போன பழைய மலத்தை வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.