நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 11
வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில் தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.


வாழ்க பொருளுடன்.–