ஒட்டாத கற்பனை
இன்று விளையும் உணர்ச்சி கொந்தளிப்பால் பொருளாதார சிக்கலால் மரபு மீறமுடியாத பேடித்தனத்தால் விளையக்கூடிய நெருக்கடிகளை எதார்த்தமுறையில் ஆராயவேண்டிய அவசரம் அவசியம் நமக்கு இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் இயங்கும் ஜீவனுக்கு லட்சியத்தின் தேவை வெளிப்படை எனினும் வெறும் லட்சிய கண்ணோட்டம் மட்டும் பலன் தராது . வாழ்க்கைக்கு ஒட்டாத கற்பனை மேலோட்டமான மகிழ்ச்சியைத் தந்து மறைந்துவிடும்.