கோள்களின் கோலாட்டம் -1.14 விருச்சிகம் திரேக்காணத்தின் பலன்கள்.
விருச்சிகம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும் தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும், பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும் அழகு பொருந்தியவளுமான தோற்றம், கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை செவ்வாய் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவள் பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள். கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள். குரு…