கோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.
இது காகிதப்பூ அல்ல!! காவியப்பூ! இதை வாழ்த்தவில்லை!! வணங்குகிறேன்.!! கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். நான் சோதிடன் அல்லன், சோதிடத்தை அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுகிற சாதாரணமானவன் என்ன காரணத்தாலோ எனது நண்பர்களில் பலரும் சோதிடர்களாகவே அமைந்துவிடுகிறார்கள். சோதிடம் படிக்கிறவர்கள் எல்லோரும் சோதிடர்கள் ஆவது இல்லை. முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய எல்லோரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவது இல்லை அல்லவா? எந்தத் துறையிலும் உவமை சொல்ல இயலாத உயர்ந்தவர்கள் உருவாவது உண்டு. ஓடுகிறவர்கள் எல்லோருமா உஷா…