அன்னை சாரதாதேவி க்கு வந்த கடிதம்
சகோதரி நிவேதிதை எழுதியது கேம்பிரிட்ஜ் மாஸ், ஞாயிற்று கிழமை. டிசம்பர் 10, 1910. அன்புமிக்க அன்னைக்கு, இன்று அதிகாலையில் ‘ சாரா ‘ வுக்காகப் பிரார்த்தனை செய்யும் பொருட்டு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் எல்லோரும் ஏசுவின் தாயான மேரியைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர். திடீரென நான் உங்களை நினைத்தேன். உங்கள் பிரியமுகம், அன்பு நிறைந்த பார்வை, உங்கள் வெண்மையான ஆடை, உங்கள் கைவளையல்கள் எல்லாம் என் மனக்கண்முன் தோன்றின. சாராவிற்கு ஆறுதல் தந்து ஆசி கூறுவதற்கு ஏற்றவர்…