சுடர்
நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி யோசிக்கும் விஷயத்தை அந்த சுடரினில் வைத்து அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு, பிரித்து அறிந்தால் குழப்பங்கள் தெரியும். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
ஆதண்டை காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்
மனிதனின் உயிர் அவன் உள்ளிழித்து வெளியே விடும் மூச்சுக் காற்று ஆகும். நாசி நுனியில் எண்ணத்தை நிறுத்தி, மூச்சுக் காற்றை எண்ணத்தின் மீது ஏற்றி , மூச்சைத் தடை செய்யாமல் அதைத் குதிரையாக்க வேண்டும். இவ்வாறு ஒன்றே கால் நாழிகை மூச்சோடு எண்ணத்தை நனையவிட்டால், சித்த விருத்தி உண்டாகி, ஞான ஒளி மின்னல், சடடோரி தோன்றி மறையும். இப்படி மூச்சுக்குள் இருக்கும் பிராணனை வசியம் செய்யும் முறைதான் விபாசன யோக முறை. முயற்சிப்போம் முடிவு என்னவென்று தான்…
கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது. ஒரு நல்ல புத்தகம் தலை சிறந்த ஆன்மாவின் விலை மதிப்பற்ற உயிர் துடிப்பு
கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.
கற்பிக்கத் துணிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது. புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால், நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும். நம்மை மற்றவர்கள்…
முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.
உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…
நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான், அதுல சன்னி,…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.