அத்தி (Ficus racemosa)
அத்தி அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.