வாழறது சுகம்
நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.
நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.
நமக்கு பிரியமுள்ளவர்கள் சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்
சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ, மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.
ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அமைதியான வாழ்க்கையை உடையவர்கள். மதப்பற்று மிக்கவர்கள். பொதுநலச் சேவை புரிபவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். தாமதத் திருமணம் உடையவர்கள். நேர்மையான முறையில் பணம் சேர்ப்பவர்கள். உயர்வு பெற பலரது உதவியையும் நாடுபவர்கள். அதிக முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள். ஏற்ற பணியை முடிக்க வல்லவர்கள்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வேறு ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…
படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.