ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2
கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…