ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14
குழந்தாய் வருத்தப்படாதே, நம் குருதேவரே மகேசுவரரும், மகேசுவரியும், அவரே எல்லாத் தெய்வங்களின் உருவமும் ஆவார். அவரே எல்லாத் தெய்வீக மந்திரங்களின் வடிவமும் ஆவார். எல்லாத் தேவர்களையும், தேவியர்களையும் அவர் மூலமாக வணங்கலாம் அவரை மகேசுவரர் என்றும் மகேசுவரி என்றும் அழைக்கலாம். வெறும் புத்தகப் படிப்பினால் ஒருவர் நம்பிக்கை பெறமுடியுமா? அதிகமாகப் படிப்பது குழப்பத்தை உண்டாக்கும் சமய நூல்களைப் படித்தறிந்து, கடவுள் ஒருவரே சத்தியம் என்பதையும், உலகம் மித்தை என்பதையும் உணரவேண்டும் என அடிக்கடி குருதேவர் சொல்வார்.