காத்திருந்தால்
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான். மீனிற்க்கு சிக்கியது புழு. மனிதனிற்கு சிக்கியது மீன். புழுவிற்க்கு ……….? ஆனாலும், காத்திருந்தது புழு. மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான். மீனிற்க்கு சிக்கியது புழு. மனிதனிற்கு சிக்கியது மீன். புழுவிற்க்கு ……….? ஆனாலும், காத்திருந்தது புழு. மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,
கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.
நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது. கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம். கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது
எதையும்வெட்கப்படற மாதிரி செய்யக்கூடாது, அப்படிப் பண்ணிட்டா வெட்கப்படக்கூடாது. இது ஆகற காரியமா செய்யறது எல்லாம் ஏதாவது ஒரு விதத்துல பிறருக்கு தெரியக்கூடாதுன்னு இருக்கும் போது எப்படி இப்படி இருக்க முடியும் இது சரியா இருந்தாலும் அனுபவத்துக்கு ஒத்து வரணும்னா நாம எதை பத்தியும் யோசிக்காத மனோபாவத்துல இருக்கணும் இதோட அர்த்தம் என்னன்னா யாரையும் மதிக்காத மனோபாவத்தில இருக்கணும் அப்படிங்கறது அப்படி இருந்தா மட்டுமே இது சாத்தியம்
பிராணாவும் (சுவாசம்) நோயும் இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் எல்லோரும் நோயடைகிறார்களா? ஒரு ஜீவனின் இச்சை, சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதில்லையா? இயற்கையாகவே பிறக்கும் பொழுது சக்தி மாறாட்டம், ஊனங்களைப் பெறுவதில்லையா? எல்லா மானிடரும் ஒரே சக்தி ஆரோக்கிய வீச்சுடன் பிறக்கிறார்களா? பிறக்கும் பொழுது குருடாயும், நொண்டியாயும், ஊமையாயும், கருவிகள் பங்கமாயும், பிறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? கெட்ட பழக்கமின்றி தொத்து நோய்கள் கேடு விளைத்தால்? இக்கேள்விகள் கடினமான கேள்விகளே, இவைகளையும் சிந்தித்து, ஆராய்ந்து குழப்பமின்றி, தைரியமாக…
ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.
சுவாலவத மிருத்தியு நாடி லக்ஷணம் …… அஸ்தத்தில் நாடிகள் தங்கள் இடத்தைவிட்டு வேறு நடந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் இருதயத்தில் தீவிரமான உண்டாகி இருந்தாலும் அந்த புருஷன் அந்த எரிச்சல் அடங்குகிறதற்கு முன்பாகவே ஏகுவான். அரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்டமூலத்தில் நடக்கும் நாடிகள் சுவஸ்தானத்தை விட்டு இரண்டரை அங்கலத்திற்கு கீழாக, நடுவிரல், பவித்திரவிரல் இந்த விரல்களில் நாடி காட்டிக்கொண்டிருந்தால் அந்த புருஷன் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான். வேறு விதம் ….. நாடிகள் அங்குஷ்ட மூலத்தை…
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம், ஒவ்வொருவிதமான வேதனை. யார்தான் இங்கு நல்லா இருக்காங்க. இது கேள்வி இதை மாத்தி கேட்டா யார் தான் இங்க நல்லா இல்லை அப்படிதான் வரும் நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு அப்படி பாக்கும் போது ஏதாவது ஒரு விதத்துல ஒவ்வொருத்தரும் நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது
அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய் பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான், என்றாலும் அவனுடைய மாம்ஸ பிண்டத்தை ஆசைவிடவில்லை. குழந்தையாயிருக்கும் பொழுது விளையாட்டின் பற்று, யெளவனத்தில் பருவப் பெண்ணிடம் பற்று, வயது முதிர்ந்தபொழுது கவலை, பரப்பிரம்மத்திடம், பற்றுக்கொண்டவன் எவனுமில்லை.
நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.