அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 26,
இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ….. இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும். மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——- வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள், முதலியவைகளை புசித்தவனுடைய நாடி வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.