அனுபவ சாலிகளின் வார்த்தைகள்
அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்டுக்கொள். அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும், உன் தோல்வியை தடுக்கும்.

அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்டுக்கொள். அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும், உன் தோல்வியை தடுக்கும்.
ஒரு வருடம் என்பது, 365 நாட்களை கொண்டதல்ல. 365 வாய்ப்புகளை கொண்டது. வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை நமதாக்குவோம்.
மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன் என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…
இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது. மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை. அதனால் மனிதனும் பணம் மேலும் பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.
அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது. மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது.
மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள். அல்லது புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள். விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டு துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை, பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம்இருக்க வேண்டும் என்று விரும்புகிறேhமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடையமுன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால்உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை. நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் * நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக,…
உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம். இதோடு, உபநிடதத்துவத்தை நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…
உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம். இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.