சுகமாக வாழ சில ஆலோசனைகள் 41
எந்த மனிதனின் தனிப்பட்ட கவலைக்கும் சுலபமான மாற்று விஷயம் சேவை செய்தலாகும். ஆம், உண்மையில் அடுத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் போது நமது உள்ளார்ந்த சக்தியும் கவலையினால் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன், புது சக்தியுமாக உருப்பெறுகிறது. இந்த முறையை கைகொண்டால் நம் வாழ்க்கைப் பயணத்தில் உண்டாகும் எந்த துயரம் மிகுந்த காலத்தையும் வென்று சுகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கலாம். நான் துயரத்தின் வலியில் அழுது கொண்டிருந்தாலும் எனது இதயம் சோகத்தில் இருந்தாலும் எனது இதழ்கள் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்கட்டும்…