ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12
முக்தியாவது நான் என்னுடையது என்ற எண்ணங்களை அறவேயொழித்து ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.

முக்தியாவது நான் என்னுடையது என்ற எண்ணங்களை அறவேயொழித்து ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.
அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.
உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…
மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர் மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம். மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…
உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.
உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும். தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.
ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது. ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான். அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான். கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?
தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது. எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…
நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். பலன்கள் :- உடல் வஜ்ரம்போல் பலம்பெரும். சோர்வு,மயக்கம் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம்பெரும். கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்
பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எனப்படும். தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது. பலன்கள் 1.கண், காது, பல் வலிகளை போக்கும். 2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும். 4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும். 5.தீய எண்ணங்களை போக்கி மனதை…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.