அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 2
நாடி பரீக்ஷ விவரணம் ….. இவைகளில் நாடீபரீக்ஷயை மாத்திரம் இந்த ஜம்புவத்தீவிலுள்ள தேவர் முதல் மானிடர் வரையிலும் உள்ள வைத்திய சிகாமணிகள் முக்கியமாய் விஸ்தரித்து எழுதி இருக்கிறார்கள் அவைகள் வடமொழியில் செய்யுட்களாக இருப்பதினால் திராவிட தேசத்தாருக்கு அதனை தெரியும்படி இலேசான சொற்களால் யாவரும் எளிதில் அறிந்து சிகிச்சை செய்யும்படிக்கு எழுதியிருக்கிறேன். வாத பித்த கபங்களாகிய திரிதோஷங்களின் விரோதத்தினால் உண்டாகும் சகல வியாதிகளும் அவைகளின் சாத்தியம், கஷ்டசாத்தியம், அசாத்தியம், அந்தந்த வியாதிகளின் பேதங்கள் முதலியவை அறிந்து சிகிச்சை செய்ய…