அர்த்தம்!
நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்.. நாம் அதிபுத்திசாலி என்று அர்த்தமில்லை.. நமக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
உங்களை சிரிக்க வைத்தவர்களுக்கு அழ வைத்தவர்களுக்கு உங்களோடு தொடரப் போகிறவர்களுக்கு உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு … பாராட்டியவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு . அன்பு செய்தவர்களுக்கு வெறுத்தவர்களுக்கு தட்டிக் கொடுத்தவர்களுக்கு இவர்கள் எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உங்களுக்கே உணர்த்தியவர்கள் அதனால் நன்றி சொல்லுங்கள் எப்போதும் சந்தோஷமாய் இருப்பீர்கள்
எந்த ஒரு உறவும் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர்கள் நுழையாத வரை.. லட்சியங்கள் மாறாதவரை பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை எந்த ஒரு உறவும் உடைதல் என்பது.. அவ்வளவு எளிதில் நடப்பதில்லை!
வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான் வெட்டியான். இறந்து போன பின் படுத்துக் கிடந்தார், ஜமீன்தார், நிமிர்ந்து நின்றான் வெட்டியான். இது தான் வாழ்க்கை..
உன்மத்த பைரவர் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.
தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…
வாத தோஷ நேத்திரம் வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண் பித்த தோஷத்தில் மஞ்சள் நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண் கபதோஷத்தில் கண்களானது நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.
குரோதன பைரவர் குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.
வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று
சண்ட பைரவர் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.