முந்திரி (Anacardium occidentals)
முந்திரி முந்திரியின் கனி பொய்க்கனி (pseudo -fruit)வகையச் சேர்ந்தது. இது,முதிர்ந்த நிலையில் இனிப்புச் சத்து கொண்டது. மேலும்,இதில்’அஸ்கார்பிக் அமிலமும் நிறைந்துள்ளது. பழம் அல்லது பழச்சாறாகச் செய்து இதனை சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு அதிகமான சத்துக்கள் நிரம்பியது. இதனை உலர்த்தியோ,அல்லது,நெய் சேர்ந்து வறுத்தோ சாப்பிடலாம் ஜாம்,பலவகையான பானங்கள்,இனிப்புப் பொருட்கள் மற்றும் போதை நீர்மங்கள் தயார் செய்வதற்காகப் பல நாடுகளிலும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.