பிடித்து……
பிடித்ததை’ வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால், எதையும் ‘பிடித்து வைத்து கொள்ளாதீர்கள்..
பிடித்ததை’ வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால், எதையும் ‘பிடித்து வைத்து கொள்ளாதீர்கள்..
1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு,…
உரையாடலின் ஒரு பகுதி 2 எதிர், எதிர் கருத்து கொண்டு கட்சி ஆரம்பித்து தொண்டர்களும் மாறி, மாறி வசை பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கட்சிகள் தேர்தலின் போது இணையும் அறிக்கை மட்டும் வரும் நாங்கள் கொள்கையில் உடன்படவில்லை ஆனால் சில விஷயங்களுக்கு வேண்டி இணைகிறோம் இணைந்திருக்கிறோம் என்று, இதை ஆழமாக யோசிக்க முடியாதவாறு எப்போதும் கட்சிகள் தொண்டர்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களையும் வைத்திருப்பார்கள். இதன் அடியில் இருப்பது என்னவென்று உற்றுப்பார் உணரப்பார் வரும் பதில் பதவி ஆசை மட்டும்…
ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும்.…
உரையாடலின் ஒரு பகுதி அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால் நம்ப வைத்து கழுத்தறுப்பது, அதாவது அரசியல் துறையில் உள்ள ஒருவன் அல்லது வாக்கு போட்ட மக்கள், அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல. அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொண்டே இருப்பார்கள். இதைப் பற்றி கேட்டால் ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.…
ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…
12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…
வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள். இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள். இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும். இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை. இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி வாய்ந்தது. அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால் உங்களால் இயக்கமுடியாதது…
மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.