பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவமுடையார் படை யாத தனம் இல்லையே.
பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் தன் மாத்திரைகளாக
முறையே வாசனை, சுவை, ஒளி, ஸ்பரிசம், சத்தம் இவைகளின் உள்ளே
பரவி நிற்கும் பரமேஸ்வரியாகிய சில காம சுந்தரியின் பாதத்தில்
பக்தி பூண்டு பணிவோர்க்கு கிடைக்காத செல்வம் எதுவும் இல்லையே!
