ஒருவர் இருக்கும் வரை 2
போ என்று சொன்னாலும் போகாது சண்டை போட்டு கொண்டேனும் உடனிருக்க, ஒருவர் இருக்கும் வரை
மனம் கனக்கும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள, ஒருவர் இருக்கும் வரை
எதற்ககாவும் எவரிடமும் நம்மை விட்டுகொடுக்காத, ஒருவர் இருக்கும் வரை
தவறுகளை தவறென சுட்டி காட்டி திருத்தும், ஒருவர் இருக்கும் வரை
துயர் அழுந்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர் துடைக்க ஒருவர் இருக்கும் வரை
நம் வாழ்வு வசந்தமானது.
