வெற்றி அடைவதற்கு மட்டும் அறிவின் பயன் இல்லை
எதைப்பிடித் திருந்தாலும் அதை அப்படியே விட்டு வெளியே வந்து விலகி
அமைதியாய் இருக்கவும் அறிவு வேண்டும்
ஏனோ இந்த அறிவு போதிக்கப்படுவதில்லை
ஒரு வேளை இது புரியாமல் புதிராய் உள்ளதோ
வெற்றி அடைய அறிவு வேண்டும் எனும் சமுதாயம்
விட்டு விலகி அமைதியாய் வேடிக்கை பார்ப்பதை
ஏனோ மறுக்கிறது அல்லது மறைக்கிறது.
