*பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கீதை கொண்டுள்ளது.
*போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல். மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது.
*யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம்,
பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம் அல்லது விடுதலையை அடைவதற்கான முறை
ஆகியவற்றை இது விரிவாக விளக்குகிறது. இதை விஷ்ணு புராணம், அக்னி புராணம்
மற்றும் நரசிம்ம புராணங்களில் விவகிர்ர்ரப்படுவதை காணலாம்.
*விசாக்க்ஷு/விசக்னு கீதை* – அஹிம்சை பற்றி மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில்
யுதிஷ்டிரருக்கு பீஷ்மர் உரைத்த கதை.
தியாகத்தின் வெளிப்புற அம்சங்களில் கவனம் செலுத்துவதையும்
விலங்குகளை பலி கொடுத்து பாவங்களைச் செய்வதற்கு மாறாக,
மனிதனில் இருக்கும் அனைத்து வன்முறை அல்லது
விலங்கு குணங்களையும் தியாகம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
