சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே.
தன்னுடைய சின்னஞ்சிறிய இடையில் சாத்திய சிவந்த நிற பட்டுடையை அணிந்த தேவி
தனது பெரிய தனங்களின் மேல் அணிந்த முத்துமாலையும்
பிச்சி மலர் சூடிய கூந்தலும் மூன்று கண்ணும் உடைய தேவியை
தனித்திருந்து தங்களது சிந்தையில் நிறுத்தி தவம் செய்வது போல்
வேறு தவம் எதுவும் இல்லை.
