*மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு கூறுவது.
*வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின் சொற்பொழிவு.
வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது.
ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கு
ம் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய விரும்புவோருக்கும்
சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன் செபவருக்கும்,
வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும்
இந்த கீதை பொருந்துகிறது.
*வ்ரித கீதை* – அசுரகுரு சுக்ராச்சாரியருக்கும் வ்ரிதாசுரனுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடல்
மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம்பெற்றுள்ளது.
*சிவ கீதை* – பத்ம புராணத்தில் இடம் பெற்றுள்ள, சிவபெருமான் ஸ்ரீராமசந்திரருக்கு போதித்தவை.
