மனிதனை மனிதன் நேசிப்பது இயற்கை ஏனோ அது செயற்கை ஆகிவிட்டது. ஆண், பெண்ணை நேசிப்பதும், பெண், ஆணை நேசிப்பதும் இயற்கை, இயல்பு ஆனால் அதே செயற்கை ஆகிவிட்டது. இயல்பு தொலைந்தும் போய்விட்டது. சிநேகத்தை மறந்த மனிதன், பரஸ்பர விரோதத்தில் மடிந்து விடுவது நிஜம். ஆண்களும், பெண்களும் தங்களுடைய இளமைக்காலங்களில் அதிகமாக நெருங்கி பழகக்கூடிய ஒரு சுதந்திரத்தினால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விபரீதங்களுக்கு நெருங்கிப் பழகக் கூடியது தான் வாய்ப்பு என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட நெருக்கமான சந்தர்ப்பங்களை தவிர்ப்பது அசாத்தியம். இந்த விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் பழகும் நெஞ்சங்கள் நிறைவேற முடியாத சாத்தியக்கூறு அற்ற எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும். அதற்கு நல்ல பண்பும், நெஞ்சில் உரமும், தெளிந்த புத்தியும், தீர்மானமான சிந்தனைகளும் யாரிடமிருந்தாவது நிச்சயம் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அசாத்திய சூழ்நிலைகளுக்கு இரையாவதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. Category: உற்றுப்பார் உணரப்பார்By admin@powerathmaApril 19, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஆண்களும்இயற்கைஉரமும்தெளிந்த புத்தியும்பண்புபரஸ்பர இயல்புபெண்களும் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஒரு சின்ன கதை பகுதி 1NextNext post:ஒரு சின்ன கதை பகுதி 2Related Postsஉரையாடலின் ஒரு பகுதி 137August 31, 2026உரையாடலின் ஒரு பகுதி 136August 30, 2026உரையாடலின் ஒரு பகுதி 135August 29, 2026உரையாடலின் ஒரு பகுதி 134August 28, 2026உரையாடலின் ஒரு பகுதி 133August 27, 2026உரையாடலின் ஒரு பகுதி 132August 26, 2026