கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால்,
அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்-
யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருளாய் சமமாக உறைவதைக் காண்கிறானோ,
அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ
அவனே உண்மையில் காண்கிறான்.
ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன்
ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான்.
இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.
