சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.
அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும்
தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும்
தவம் செய்பவர்கள் பெறும் ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும்
மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே
அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!
