கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே.
உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம்
ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே
கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே
எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும்
கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே
இந்த அளவிற்கு பெரியவளான நீ
இரங்கத்தக்க எளியேனின் சிற்றறிவில் அடங்கியது
மிக பெரிய அதிசயமே தாயே!
