கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்,
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்,
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
நான் முன் ஜென்மத்தில் எத்தனை புண்ணியங்கள் செய்திருந்தால்
உன் அடியார் கூட்டத்தோடு மட்டும் கலக்கும் பேறு பெற்று இருப்பேன்
இது மட்டுமல்லாது
ஏழுலகங்களையும் பெற்ற தேவியே
நான் கருதுவது உன் புகழ் கற்பது உன் பெயர்
மனமுருகி பக்தி செய்வது உன் இரண்டு திருவடி தாமரைகளில் மட்டுமே
இத்தனையும் நான் எப்பிறவியில் செய்த புண்ணியமோ அபிராமி தாயே!
