ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது.
இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும்,
தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறேன்.
எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு யார் பொறுப்பு?
எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்;
ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல;
நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும்
நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.
