அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல,
நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன.
எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது
இனிப்பு –
மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது.
இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது.
எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது
உடலைப் பெருக்க வைப்பது. குரலுக்கு நல்லது.
