அன்பெல்லாம் வெறுப்பாகவும்
அக்கறையெல்லாம் உதாசீனமாகவும்…
உறவெல்லாம் துரோகமாகவும்
மரியாதையெல்லாம் அவமானமாகவும்..
இருப்பேனென்ற வார்த்தையெல்லாம்
ஏனிருக்க வேண்டும்
என்று மாறும்..
மாறாது என்று நினைத்ததெல்லாம்
கண்டிப்பாக ஒரு
நாள் மாறும்
எப்போது என்றும் தெரியாது
ஏன் என்றும் தெரியாது
அதனால்
எப்போதும் தயாராய்
இரு
எதற்கும் தயாராய் இரு.
