வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர்
முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன?
அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை
மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்?
மனிதன் பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன
கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன?
மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான்
