அறிந்து கொள்வது அறிவெனப்படுவது
அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம்
அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது.
அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம்.
ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை.
புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.
