நம்முடைய வினைகள் நமக்குத் தெரியத் தொடங்கும் போது
நாம் எதை, எதை எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டி வரும் என்பது தெரிந்து விடும்.
அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய் விடும்,
பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும்.
தெளிவு வந்து விட்டால் சிந்தனை சரியாய் அமையும்.
சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும்.
சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும்
அப்போது பாபம் பின் தொடராது.
பாபம் தொடராத வாழ்க்கை அமைவது புண்ணியத்திலும் பெரும் புண்ணியம்.
அது எல்லோருக்கும் அமைவது இல்லை
அப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.
