உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை
ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது
நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்ய தொடங்கிவிடுகிறது.
அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல்
அமிர்தமும் நஞ்சாகிறது.
நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கி விட்டாலே
நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.
