1. ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2. அர்க்களம் சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3. சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4. பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2, 4, 11 இவைகளில் இருந்தால் பாப அர்க்களம் உண்டாகும், அதாவது கெட்ட பலன் உண்டாகும். 5. மேற் சொல்லிய ஒரு குறித்த பாவத்திற்கு அர்க்களப் பாவங்களாகிய 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அந்த குறித்த பாவத்திற்கும் 3 – வது, 10 – வது 12 – வது பாவங்கள் அர்க்களத்திற்கு விரோதமான பாவங்களாகும். 6. இவ்விதமாகவே மேற்சொல்லிய ஒரு குறித்த கிரகத்திற்கு இரண்டாவது, நான்காவது, பதினொராவது பாவத்திலிருக்கும் கிரகத்திற்கு அந்தக்குறித்த கிரகத்திற்கு மூன்றாவது, பத்தாவது பன்னிரண்டாவது பாவத்திலிருக்கும் கிரகம் அர்க்கள கிரகத்திற்கு விரோதமானதாகும். 7. சுப அர்க்களம் உண்டாகும் போது மூனறாவது, பத்தாவது, பன்னிரண்டாவது பாவங்களில் கிரகங்கள் இருந்தால் அக்கிரகங்கள் சுப அர்க்களத்தால் உண்டாக வேண்டிய சுப பலன்களை மாற்றி கெட்ட பலன்களைக் கொடுக்கும். 8. பாப அர்க்களம் உண்டாகும் போது மூன்றாவது, பத்தாவது, பன்னிரண்டாவது பாவங்களிலுள்ள கிரகங்கள் பாப அர்க்களத்தால் உண்டாக வேண்டிய கெட்ட பலன்களை மாற்றி நல்ல பலன்களையே கொடுக்கும். Category: ஜோதிடம்By admin@powerathmaJanuary 18, 2021Leave a commentTags: aathmaaஅர்க்களா பலன்ஜெயமுனிமதம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:யோசிக்க வேண்டிய விஷயங்கள்NextNext post:நட்சத்திரத்தின் சிறப்பு 1Related Postsராகு 3July 15, 2026ராகு 2July 14, 2026ராகு 1July 13, 2026சனி 22January 22, 2026சனி 21December 20, 2025சனி 20December 19, 2025