செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்,
அப்பும் களப அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன்,என் துணைவிழிக்கே.
தந்தத்தால் கலந்த செப்பும் பொற்கலசமும் போன்ற உன் தனங்களின் மேல்
அப்பிய சந்தனத்தையுடைய அபிராமிவல்லி உன் காதில் உள்ள முத்து ஆபரணமும்
வயிரக்குழையும் உன் விழியின் ஒரப்பார்வையும்
அதனில் மலர்ந்த புன்னகை
நிலவை போல் இருப்பதையும்
என் இரண்டு கண்களிலும் எழுதி வைத்தேன்.
