ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே.
தாயே நீ என் சிவபிரான் அளந்து தந்த இரண்டு படி நெல் கொண்டு
உலகமெல்லாம் பசி நீங்கி பிழைக்கும் படி தர்மம் செய்யும் உன்னையும் பாடி
பின் செல்வர் செய்யும் தானங்களை கண்டு
அவரையும் என்னை புகழ்ந்து பாட வைத்தாயே
இதுவா உன்னுடைய உண்மையான திருவருள்.
