மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே.
பல ஆயிரம் மின்னல்கள் உருவெடுத்து வந்தது போல் விளங்கும் கோலத்தை உடைய அபிராமவல்லி
அடியவர்களின் நெஞ்சத்தில் இருக்கும் ஆனந்தமயமாக கொடி போன்றவள்
அரிய வேதத்தின் முன் நடு கடையாகி முழுவதுமாய் இருப்பவன்
இவளை உலகத்து உயிர்கள் போற்றி தொண்டு செய்தாலும்
செய்யாவிட்டாலும் அவளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.
