இப்படி நீங்கள் இருக்க தொடங்கினால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றம்
உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் பரவசபடுத்தும்
அந்த பரவசத்தை அறிய ஆசைபடுங்கள் உணர முயற்சி செய்யுங்கள்
விடாது அதை அடைய அதை பின் தொடருங்கள்
அதில் நீங்கள் பயணப்பட்டு அதை நீங்கள் கண்டடையும் நேரம்
உங்களில் உங்களுக்கு இன்னும் சொல்ல போனால்
உங்களுக்காக மட்டுமே இருந்த கொண்டிருந்த ஒன்றை காணுவீர்கள்
அதை கண்ட கணம் நீங்கள் அதை பிரிந்த காலம் எல்லாம் மறைந்து
காலமில்லா பெரு வெளியில் அதனுடன் கலப்பீர்கள்
அப்போது ஏற்படும் நிலை அனுபவத்திற்கு உகந்ததேயன்றி
வார்த்தைகளுக்கு உண்டானது அல்ல
ஏனென்றால் வார்த்தைகளால் அதை அடைய முடியாது.
