வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
அபிராமி தாயே உன்னிடம் வந்து தஞ்சமடையும் அடியவர்களுக்கு
சொர்க்லோக பதவியை அன்போடு தந்து நான் முக பிரம்மாவின் கழுத்தில்
துழாய் மாலையும் திருமாலின் திருமார்பில் பருத்த கவுத்துவ மணியும்
ஈசனின் இடபாகத்தில் இருந்து தேனொழுரும் தாமரை மலரில்
பரவிய கிரகணங்களை உடைய சூரிய விடத்திலும் சந்திரனிடத்திலும் வீற்று இருப்பவளே!
