இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனைநடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையேஎன்பன் ஓடிவந்தே.
ஈசனின் உள்ளம் முழுவதும் உருகும்படி சந்தன சலவையை பூசியுள்ள குவிந்த தன பாரங்களை உடைய
யாமளையாகிய தேவியே நான் செய்யும் பாவத்தின் விளைவாக
எனை கொல்ல புகும் நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில்
நான் பயந்து நடுங்கி வருந்தி உன்னிடம் ஒடி வந்து உன்னையே சரணம் என தஞ்சமடைவேன்
அந்த நேரத்தில் என் முன் எழுந்தருளி நீ
அச்ஞசற்க என்று சொல்லி என்னை பாதுகாத்து அருளவேண்டும்.
