ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
ஆனந்தமாயும் அறிவாயும் அமுதமாயும் இருக்கின்ற அபிராமி தேவியே
நான்கு வேதங்களுக்கும் முடிவாய் நிற்கும் நின் திருவடி தாமரை
வெண்ணிறத்தையுடைய சிவபெருமான்
தன் ஆடும் இடமாக கொண்ட மயான பூமியில்
ஆடும் போது அவரின் திருமுடி மாலையாக உள்ளது.
